Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகஞ்சா வைத்திருந்த பிரபல மாடல் அழகி உடனடி கைது..!

கஞ்சா வைத்திருந்த பிரபல மாடல் அழகி உடனடி கைது..!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்குத் தனியார் விமானம் மூலம் சென்ற நிலையில் ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கஞ்சா மற்றும் கஞ்சாவைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியவற்றை வைத்திருந்த காரணத்துக்காக ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது குற்றத்தை ஒப்புக்
கொண்டதன் பின்னர் இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஜிகி ஹடிட் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது. நன்றாகவே முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.

Recent News