Monday, December 23, 2024
HomeLatest Newsசமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற நாய் உயிரிழந்தது……!

சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற நாய் உயிரிழந்தது……!

சமூக வலைத்தளங்களில் மூலம் உலகப் புகழ் பெற்ற சீம்ஸ் நாய் உயிரிழந்ததாகத் அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்களுக்கு குறித்த நாயைத் தெரியாமலிருக்காது. குறிப்பாக மீம்ஸ்களில் குறித்த நாயை அடிக்கடி பார்க்கலாம்.

இதேவேளை கடந்த 2017 ம் ஆண்டு பால்ட்சே என்ற பெயருடைய ஷிபா இனு இனத்தைச் சார்ந்த நாய் சமூக வலைத்தளங்களில் பிரபலமானது.இயற்கையாக சிரிப்பதைப் போன்ற முக பாணியுடைய நாயை நெட்டிசன்கள் சீம்ஸ் என்ற பெயர் வைத்து அழைத்தனர். கடந்த 18 ம் திகதி புற்றுநோயால் அவதியுற்ற குறித்த நாய்க்கு தோராசென்டெசில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின் கண் விழிக்கவில்லையென அதன் உரிமையாளர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் வருத்தப்பட வேண்டாம் பால்ட்டே இந்த உலகத்திற்கு அளித்து வந்த மகிழ்வைநினைவில் கொள்க எனவும் தனது பதிவில் உரிமையாளர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Recent News