Thursday, January 23, 2025
HomeLatest Newsகனடாவிலிருந்து நாடுகடத்தப்படவிருந்த குடும்பத்திற்கு இறுதி நேரத்தில் கிடைத்த வாய்ப்பு….!

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவிருந்த குடும்பத்திற்கு இறுதி நேரத்தில் கிடைத்த வாய்ப்பு….!

கனடாவிலிருந்து தாயும் மூன்று பிள்ளைகளும் நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம அவர்களுக்கு கனடா பெடரல் அரசிடமிருந்து ஒரு செய்தி வந்தது. இவர்கள் கடந்த 2019 ம் ஆண்டு Roham Road ஊடாக கனடாவிற்குள் நுழைந்தனர்.

ஆர்வின் பிலிப்பைன்ஸ்ஸையும் ; டேவிட் நையியிரியாவையும் சேர்ந்தவர்களாவார். நையீரியாவில் வாழ முற்பட்டாலும் அவர்களுடைய பிள்ளைகளை ஒரு கும்பல் கடத்த முற்பட்டதாலும் பிலிப்பைன்ஸில்.வாழ முற்பட்டால் அங்கு இனவெறுப்பை எதிர்நோக்க தலைப்பட்டதால் கனடாவிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

டேவிட் குடும்பம் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்த கோரி்கையும் கடந்தாண்டு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் இவர்களை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக டேவிட் மற்றும் கடைசி மகன் நைஜீரியாவிற்கும் ஆர்வினும் ஏனைய இரு பிள்ளைகளும் பிலிப்பைன்ஸிற்குக் கொண்டு செல்ல முடிவானது.

இதேவேளை டேவிட்டுடன் மகன் நைஜீயிரியாவிற்கு பயணப்பட ஆயத்தமான போது தாயிடமிருந்து பிள்ளைகளை பிரிக்கக் கூடாதென நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த ஜீன் மாதம் 28 ம் திகதி டேவிட் மட்டும் நைஜீயிரியாவிற்கு கடத்தப்பட்டார்.

தாயுடன் ஏனைய பிள்ளைகள் பிலிப்பைன்ஸிற்கு கடததத் தயாராகவிருந்த நிலையில் மனிதநேய அடிப்படையில் இவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியளிப்பது தொடர்பில் வழக்கு நிலுவையிலுள்ளதால் நாடு கடத்தல் நிறுத்தப்பட்டது.

இவ் உத்தரவின் பிரகாரம் இவர்கள் நாடு ஙடத்தப்படமாட்டார்களாயினும் டேவிற் இன்றளவும் நைஜீயிரியாவிலே உள்ளார். தனது மனைவி மற்றும் பிளளைகள் நாடு கடத்தப்படாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

Recent News