Monday, December 23, 2024
HomeLatest NewsIndia Newsபிரதமர் மோடியின் வீட்டின் மேல் பறந்த ட்ரோன்..!அதிகாலையில் பரபரப்பு..!

பிரதமர் மோடியின் வீட்டின் மேல் பறந்த ட்ரோன்..!அதிகாலையில் பரபரப்பு..!

பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு மேல் ட்ரோன் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய விதமாக ட்ரோன் ஒன்று பறந்துள்ளது.

அதையடுத்து, பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையினரை அதிகாலை 5.30 மணியளவில் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமரின் வீட்டின் மேலாக ட்ரோன் பறந்தமை குறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், டெல்லி பொலிஸார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும் இது வரையிலும் ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

Recent News