Wednesday, December 25, 2024
HomeLatest Newsவெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இன்று ஜெனிவா நோக்கி பயணம்

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இன்று ஜெனிவா நோக்கி பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று (திங்கட்கிழமை) ஜெனிவா பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News