Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsநடுறோட்டில் அலைந்துதிரிந்த பிணம் ! பதறிய மக்கள் ! வெளியிடப்பட்ட வீடியோ !

நடுறோட்டில் அலைந்துதிரிந்த பிணம் ! பதறிய மக்கள் ! வெளியிடப்பட்ட வீடியோ !

‘பண்ணிடுவோம்’ என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னை பின்தொடர்பவர்கள் கமெண்டில் பதிவிடும் டாஸ்க்குகளை அவர் செய்து முடிப்பது வழக்கம்.இவ்வாறு தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.அந்த இளைஞரின் வீடியோவுக்கு கமெண்ட் செய்த ஒருவர், பிணம் போல சாலையில் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த இளைஞர் சைக்கிளில் வாழைப்பழம், ஊதுபத்தி ஆகியவற்றை சொருகிவிட்டு பிணம் போல மேக்கப் போட்டு சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார்.இதனை பார்த்த பலரும் என்ன கொடுமை இது? என்றபடி தலையில் அடித்துக்கொண்டே சாலையில் சென்றுள்ளனர்.
அதனையும் அந்த இளைஞர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலரும், பொது இடங்களில் இப்படியா நடந்துகொள்வது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், திறமையை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Recent News