Friday, January 24, 2025
HomeLatest Newsஉக்ரேனில் திடீரென தகர்க்கப்பட்ட அணை ; பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடுமென எச்சரிக்கை...!

உக்ரேனில் திடீரென தகர்க்கப்பட்ட அணை ; பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடுமென எச்சரிக்கை…!

உக்ரேனில் ரஷ்யா ஆக்கிரமிப்புக்குட்பட்ட நோவா ககோவ்கா என்ற பகுதியிலுள்ள பெரிய அணை தகர்ககப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்க்கணக்கான மக்கள் அணையைச் சூழவுள்ள பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இவ் அனர்த்தம் காரணமாக 80 நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என உக்ரேன் அதிபர் லோலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நீக்ரோ ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுதது வருவதனால் ஹேசன் நகருக்கு ஒரே பேரழிவு வெள்ள அபாயம் உள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது.

உக்ரேன் நாட்டின் தெற்கு ஹேசன்் பகுதியில் அமைந்திருக்கும் நீப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட பெரிய அணையையும் அதனுள் இருக்கும் நீர் மின் உற்பத்தி நிலையத்தையும் ரஷ்யா தகர்த்திருப்பதாக உக்ரேன் குற்றஞ் சுமத்தியுள்ளது.

Recent News