Wednesday, December 25, 2024
HomeLatest Newsதனியார் நிறுவனம் நடத்திய போட்டி..!12 லட்சத்தையும் தன்வசமாக்கிய தமிழர்..!

தனியார் நிறுவனம் நடத்திய போட்டி..!12 லட்சத்தையும் தன்வசமாக்கிய தமிழர்..!

தமிழர் ஒருவர் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டியில் 12 லட்சம் ரூபாயினை வென்ற அதிஷ்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள உள்ள தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் தங்களது ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு கலை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் ஒரு விளையாட்டு அரங்கை அந்த நிறுவனம் தயார்படுத்தியதுடன் தனது ஊழியர்களை கலந்து கொள்ளவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விளையாட்டில், அரங்கின் நடுவே பணம் மூட்டை அடங்கிய ராட்சத பலூன் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில், அதனை ஊழியர்களில் யார் முதலில் பறிக்கின்றார்களோ அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளனர்.

அந்த வகையில் இந்த விளையாட்டில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தமிழரான ஆறுமுகம் என்பவர் ராட்சத பலூனை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார்.

அவர் கைப்பற்றிய அந்த ராட்சத பலூனில் 12 லட்சம் ரூபாய் இருந்த நிலையில் அந்த பணத்தினை குறித்த நிறுவனம் த்திற்கு பரிசாக வழங்கியுள்ளது.

மேலும் ஆறுமுகம் அந்த தனியார் நிறுவனத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News