Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld News40 லட்சம் டிராக்டர்களை விற்று சாதனை படைத்த நிறுவனம்!

40 லட்சம் டிராக்டர்களை விற்று சாதனை படைத்த நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளராக மஹிந்திரா டிராக்டர்ஸ் (Mahindra Tractors) உள்ளது. இந்நிலையில், மஹிந்திரா டிராக்டர்களின் விற்பனை எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.மஹிந்திரா டிராக்டர்ஸ் மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமாகும். மஹிந்திரா நிறுவனத்திற்குத் தெலுங்கானா மாநிலம், ஜாகீராபாத்தில் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலை ஒன்று உள்ளது.2013-ல் இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டது.

இத்தொழிற்சாலை திறக்கப்பட்டு பத்து வருடங்களைக் கடந்தாலும், மஹிந்திராவின் கீழ் செயல்படும் தொழிற்சாலையாகவும், மஹிந்திரா டிராக்டர் உற்பத்திக்கான உலகளாவிய மையமாகவும் கருதப்படுகிறது.ஏனெனில், இங்குதான் டிராக்டர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டிராக்டர்கள் ஜாகீராபாத்தில் செய்யப்பட்டவையாக இருக்கும். மஹிந்திராவின் முதல் டிராக்டர் 1963-ல் வெளிவந்தது. அந்தசமயத்தில் மஹிந்திரா நிறுவனத்தால் தனித்துச் செயல்பட முடியாததால், அமெரிக்காவைச் சேர்ந்த விவசாய கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான இன்டர்நேஷனல் ஹார்வெஸ்டருடன் இணைந்து செயல்பட்டது.இந்நிறுவனம், 2004-ல் டிராக்டர்கள் உற்பத்தி எண்ணிக்கையில் 10 லட்சத்தை தாண்டியது. ஆனால், 10 லட்ச டிராக்டர்களை உற்பத்தி செய்ய நிறுவனத்திற்கு 41 ஆண்டுகள் வரை தேவைப்பட்டது.

2009-ல் உலகில் அதிக எண்ணிக்கையில் விவசாய டிராக்டர்களை விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை மஹிந்திரா நிறுவனம் பெற்றது. 2013-ல் 20 லட்ச டிராக்டர்களை உற்பத்தி செய்தது. அதுவே, 2019-ல் இந்த எண்ணிக்கை 30 லட்சமாக உயர்ந்தது.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2024-ல் 40 லட்சம் டிராக்டரை நிறுவனம் விற்றுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்களை நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

Recent News