Wednesday, March 26, 2025
HomeLatest Newsநாட்டிற்குள் அதிரடியாக உள்நுழைந்த சீனக் கப்பல்

நாட்டிற்குள் அதிரடியாக உள்நுழைந்த சீனக் கப்பல்

X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையிலும் அதனை சூழவுள்ள கடற்பரப்பிலும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்தது.

இந்த தீ விபத்து காரணமாக அந்த கப்பலில் இருந்த கொள்கலன்கள் உட்பட சுமார் 1700 மெற்றிக் தொன் சிதைவுகள் கடலில் கலந்துள்ளது.

இந்தநிலையில் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Recent News