Friday, April 25, 2025
HomeLatest Newsயூரியாவுடன் நாட்டை வந்தடைந்த சீனக் கப்பல்

யூரியாவுடன் நாட்டை வந்தடைந்த சீனக் கப்பல்

12 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலி தெரிவித்தார்.

குறித்த கப்பல் சீனாவிலிருந்து வருகை தந்துள்ளது. கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் இன்றைய தினம் காலை ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதனை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலி மேலும் குறிப்பிட்டார்.

Recent News