Thursday, January 23, 2025
HomeLatest Newsகொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! மகிந்த ராஜபக்சவிற்கு கௌரவமான பிரியாவிடை

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! மகிந்த ராஜபக்சவிற்கு கௌரவமான பிரியாவிடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்துவது மற்றும் அவருக்கு கௌரவமான பிரியாவிடை வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் குழு கலந்துரையாடலொன்றை நிகழத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் , மிக குறுகிய காலத்திற்குள் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

எனினும், இந்த பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம், செயற்பாட்டு அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல கட்சிகள் பல தலைமைகளின் கீழ் செயற்படவுள்ளதாகவும் பெரும்பாலான கட்சிகள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் முன்னேறுவதற்கு ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Recent News