Thursday, January 23, 2025
HomeLatest Newsசீனா மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சீனா மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சீனாவில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டில், உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமெடுத்து மக்களிடையே பரவி வருகிறது.

இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் சூழலை தடுக்கும் பொருட்டும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் 16 ஆயிரம் காய்ச்சல் கிளினிக்குகள் திறக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

Recent News