Tuesday, December 24, 2024
HomeLatest Newsகாதலியுடன் பிக்பாஸ் வீட்டில் டூயட் பாடிய பிரபலம்! கண்கலங்க வைத்த வீடியோ காட்சி

காதலியுடன் பிக்பாஸ் வீட்டில் டூயட் பாடிய பிரபலம்! கண்கலங்க வைத்த வீடியோ காட்சி

பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கான ப்ரீஸ் டாஸ்க் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் முதலிடத்தை பிடிக்கிறது.

பொதுவாக பிக்பாஸ் விதிமுறைகளின் படி இதில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் பிரபலங்களாகவே காணப்படுவார்கள்.

அந்தவகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் செல்கிறது. இதில் 21 பிரபலங்கள் பங்கேற்றுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து குறைவாக வாக்குகள் பெற்று சுமார் 10 மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து அவர்களை மன ரீதியாக வலுவுட்டுகிறார்கள்.இதனால் போட்டியாளர்கள் தங்களின் உறவினர்களை பார்த்த பின்னர் கத்தி கதறி அழுதுள்ளார்கள்.

இன்னும் சிலர் நுனுக்கமாக விளையாட சில நுட்பங்களை கூறிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து கதிரவனை பார்ப்பதற்கு அவரின் காதலி மற்றும் அம்மா இருவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது கதிரவன் கட்டியனைத்து அழுது புலம்பிய பின்னர் நடனம் ஆடி பிக் பாஸ் வீட்டை குதூகலப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Recent News