Tuesday, December 24, 2024
HomeLatest Newsபிரதமர் அலுவலகம் மீது கார் மோதியதால் பரபரப்பு...!வேகமாக வாகனம் ஓடிய இளைஞரை கைது செய்த ...

பிரதமர் அலுவலகம் மீது கார் மோதியதால் பரபரப்பு…!வேகமாக வாகனம் ஓடிய இளைஞரை கைது செய்த பொலிசார்..!

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ தினத்தன்று லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது.

அந்த கார் பிரதமர் ரிஷி சுனக் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் ஒயிட் ஹால் நுழைவு வாயிலின் முதலாவது கேட் மீது மோதியது.

அதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் உடனடியாக காரை சுற்றி வளைத்தனர்.ஆயினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

இருப்பினும், பிரதமர் இல்லம் மீது வாகனத்தை மோதவிட்டு குற்றமிழைக்கும் வகையில் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியதாக, இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recent News