தேங்காயில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி மட்டுமின்றி அனைத்து வகையான கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
இது உடலுக்கு பல வழிகளில் நன்மையளிக்கிறது. இத்தகைய தேங்காயை இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் இன்னும் சிறப்பான நன்மைகளை பெறலாம்.
தூங்கும் முன் பச்சையாக தேங்காய் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் உள்ள கொழுப்பு உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தும்.
இரவு தூங்கும் முன் தேங்காயை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும்.
தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.