Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇளம்பெண்களால் கடத்தப்பட்ட இளைஞனுக்கு நடந்த கொடூரமான செயல்!

இளம்பெண்களால் கடத்தப்பட்ட இளைஞனுக்கு நடந்த கொடூரமான செயல்!

இரவில் வேலைக்கு சென்று வந்த இளைஞரை 4 பேர் கொண்ட இளம்பெண்கள் கடத்தி கற்பழித்த சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியை சேர்ந்த இளைஞர் அங்குள்ள லெதர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இளைஞர் வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது அவரிடம் 20 வயதுடைய 4 இளம்பெண்கள் கும்பல் காரில் வந்து துண்டுசீட்டை காண்பித்து முகவரிக்கு வழித்தடம் கேட்டுள்ளது. வழி கூற வந்த இளைஞரின் முகத்தில் மயக்க மருந்தை அடித்த இளம்பெண்கள் அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர். 

அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றதும் இளைஞரை மயக்கத்தில் இருந்து எழுப்பி வலுக்கட்டாயமாக மதுபானம் குடிக்க வைத்து இருக்கின்றனர். பின்னர் 4 பெண்களும் அவரை கட்டாயப்படுத்தி கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

அதிகாலை நேரத்தில் அவரை விடுவித்து சாலையில் விட்டுச் சென்ற நிலையில் வீட்டிற்கு சென்ற இளைஞர் தனக்கு நடந்ததை மனைவியிடம் கூறி புலம்பி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளார். 

இதன்பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Recent News