Tuesday, December 24, 2024
HomeLatest Newsதற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியை வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்!

தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியை வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்!

பிரித்தானியாவில் ஒருவர் தனது வீட்டில் உலகின் மிகவும் ஆபத்தான தாவரம் என கூறப்படும் செடியை ஆர்வத்துடன் வளர்த்துவருகிறார்.

Gympie-Gympie அல்லது அவுஸ்திரேலியாவின் கொட்டும் மரம் அல்லது தற்கொலை செடி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த செடி அவுஸ்திரேலிய மற்றும் மலேசிய மழைக்காடுகளில் காணக்கூடிய தாவரமாகும்.

இதனை பிரித்தானியாவில் Daniel Emlyn-Jones எனும் 49 வயது தோட்டக்கலை ஆர்வலர் தனது வீட்டில் கூண்டுகளுக்குள் அடைத்து வளர்த்துவருகிறார்.

அதன் ஆபத்தை உணர்ந்தும் ஒரு பொழுதுபோக்கிற்காக அதனை வளர்த்துவருகிறார். அந்த கொண்டுகளில் அவர் எச்சரிக்கை சின்னங்களை வைத்துள்ளார். தனது தோட்டக்கலையில் கொஞ்சம் சுவாரசியத்தை விரும்பி இதனை செய்துவருகிறார்.

இந்த செடியில் இருக்கும் முட்கள் ஒருவரது தோல் மீது குத்தினால், பல மாதங்களுக்கு வலிக்கும் என்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

முள் குத்திய அந்த இடத்தில் முதலில் லேசான எரிச்சல் ஏற்படும், சில நிமிடங்களில் நெருப்பில் இருப்பது போல் சூடாகவும் எரிச்சலாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமிலம் மற்றும் மின்சாரம் தாக்கியது போல் இருக்குமாம்.

Daniel Emlyn-Jones, “இந்த செடியின் விதைகளை இணையத்தில் பெறலாம், ஆனால் அது அடங்கிய பகுதிக்கு வெளியே பரவாமல் கவனமாக இருக்க வேண்டும், எனவே நான் அதை என் முன் அறையில் பானையில் வைத்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எனது விதைகளைப் பெற்றேன், அதற்கு அறுபது அவுஸ்திரேலிய டொலர்கள் போல செலவாகும், அது மலிவாக இல்லை” என்று கூறினார்.

எப்பொழுதும் தாவரங்களை விரும்பினேன், ஆனால் தான் தோட்ட செடி வகைகளால் சலிப்படைந்ததால், இந்த செடியை வளர்க்க முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

Recent News