Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia News10 ஆண்டுகளின் பின்னர் தந்தையுடன் இணைந்த சிறுவன்..!அபூர்வ நிகழ்வு..!

10 ஆண்டுகளின் பின்னர் தந்தையுடன் இணைந்த சிறுவன்..!அபூர்வ நிகழ்வு..!

தந்தையும் மகனும் 10 ஆண்டுகளின் பின்னர் ஒன்றிணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டத்தைச் சேர்ந்த டிங்கு வர்மா தனது மனைவி மற்றும் 3 வயது மகனின் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் மனைவி 2013 ஆம் ஆண்டளவில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனால், இந்த மர்ம சம்பவம் தொடர்பாக டிங்குவை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதனால், ஆதரவின்றி தவித்த அவர்களது 3 வயது மகனை அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கான தொண்டு நிறுவனத்தில் சேர்த்துள்ள நிலையில் வளர்ந்து வந்துள்ளான்.

தற்பொழுது 13 வயதாகும் அவரது மகன் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யும் பணியில் அவ்வப்போது உதவி செய்து வருகின்றான்.

அவ்வாறிருக்கையில், அண்மையில் அந்த சிறுவன் அன்னதானம் வழங்கிய போது, சிறையில் இருந்து வெளியே வந்த டிங்குவும் வரிசையில் நின்று உணவு வாங்கியுள்ளார்.

அதன் பொது மகனான சிவம் தனது தந்தையை அடையாளம் கண்டு கொள்ள, டிங்குவும் தன் மகனை தெரிந்து கொண்ட பின்னர் இருவரும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தமையால் கண்ணீர் மல்க கட்டித் தழுவிக் கொண்டுள்ளனர்.

இது குறித்து மகன் சிவம் தனது தந்தையை மீண்டும் சந்திப்பேன் என்று தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் இது தெய்வச் செயல் என்றும் கூறியுள்ளான்.

அதையடுத்து உரிய நடைமுறைகளுக்குப் பின்னர், டிங்குவுடன் சிவத்தை, தொண்டு நிறுவன அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

Recent News