Thursday, January 23, 2025
HomeLatest Newsஅவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கி இலங்கையில் பிறந்த சிறுவன் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கி இலங்கையில் பிறந்த சிறுவன் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையில் பிறந்த சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கல்வின் விஜயவீர என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் உள்ள பாடசாலைக்கு சக மாணவர்களுடன் வானில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இதன்போது விபத்தில் காயமடைந்த மாணவனை மீட்டு அவசர சேவை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News