Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsகண்ணியத்தின் கலங்கரை விளக்கம்...!ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடியின் பிறந்த நாள் வாழ்த்து...!

கண்ணியத்தின் கலங்கரை விளக்கம்…!ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடியின் பிறந்த நாள் வாழ்த்து…!

இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஜனாதிபதி முர்முவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 65 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில், பிரதமர் மோடி அவருக்கு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிற்கான கலங்கரை விளக்கமாக இருப்பதுடன், நமது மக்களின் நலன்களுக்காக ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசத்தின் வளர்ச்சியினை மென்மேலும் மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிக்காக அவர் பாராட்டப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஓர் உந்துதலாக இருக்கும் என்றும் அவரது உடல் நலம் மற்றும் நீண்ட வாழ்வுக்காக வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Recent News