Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld News10 சென்டிமீற்றர் வாலுடன் பிறந்த குழந்தை – மருத்தவர்கள் ஆச்சர்யம்..!

10 சென்டிமீற்றர் வாலுடன் பிறந்த குழந்தை – மருத்தவர்கள் ஆச்சர்யம்..!

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 10 சென்றிமீற்றர் அளவு வாலுடன் பிறந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.இவ்வாறு வாலுடன் பிறந்ததற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களில் முதுகுத்தண்டு இணைக்கப்படும் போது, பொதுவாக முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.அத்துடன் இது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Recent News