Thursday, January 23, 2025
HomeLatest Newsஇறந்து உயிர் பிழைத்த 60 வயதுடைய விவசாயி

இறந்து உயிர் பிழைத்த 60 வயதுடைய விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆன 60 வயதுடைய சண்முகம் என்பவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை சண்முகம் திடீரென ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.அத்தோடு அவர் மயக்க நிலையிலேயே இருந்ததையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

பின்னர் நோயாளி காவு வண்டி மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர். ஊரை நெருங்கிய போது மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

பின்னர் நோயாளி காவு வண்டி மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர். ஊரை நெருங்கிய போது மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத்தொடங்கியதோடு உடல் நலமும் சீராகி இருந்துள்ளது.

மேலும் வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர்.

Recent News