Sunday, January 26, 2025
HomeLatest Newsபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்!

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்!

காலி, கரந்தெனிய – மஹகொட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

தாயும் தந்தையும் வீட்டில் இருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவன் வீட்டில் இல்லாததால், பெற்றோர்கள் நடத்திய தேடுதலின்போது, அருகில் உள்ள நிலத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் அவர் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.

சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

Recent News