Thursday, January 23, 2025
HomeLatest Newsகோபத்தில் தாயினை கத்தியால் குத்திய 17 வயது சிறுவன்!

கோபத்தில் தாயினை கத்தியால் குத்திய 17 வயது சிறுவன்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜேக்கப் ப்ரூவர் என்ற 17 வயது சிறுவன், தன் அம்மாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவனிடம் அவனது அறையை சுத்தமாக வைத்திருக்கும்படி அவனது தாய் கூறியிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஜேக்கப், தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கத்தியால் தாயை குத்தி உள்ளார். அத்துடன் பாத்திரத்தால் தலையில் அடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜேக்கப்பை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டான். துப்பறிவாளர்கள் நடத்திய நேர்காணலில் பேசிய ஜேக்கப் தனது தாயை பலமுறை கத்தியால் குத்தியதாக கூறினான்.

தாயை கொல்வதற்கு துப்பாக்கி வேண்டும் என ஜேக்கப் தன் நண்பரிடம் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளான். அவன் துப்பாக்கி கொண்டு வர முடியாது என்று கூறியதுடன், கத்தி கொண்டு வருவதாகவும் கூறி கத்தியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். மேலும், அந்த நண்பர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

Recent News