Thursday, April 17, 2025
HomeLatest Newsபேஸ்புக்கில் முளைத்த காதலால் 15 வயது மாணவிக்கு நேர்ந்த அவலம்..!

பேஸ்புக்கில் முளைத்த காதலால் 15 வயது மாணவிக்கு நேர்ந்த அவலம்..!

இளைஞர் ஒருவர் 15 வயதுடைய மாணவியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் அடைப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நேற்றைய தினம் (25) உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக 15 வயது சிறுமியுடன் தொடர்பைப் பேணிய 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த இளைஞர், சிறுமியை வேறு ஒரு இடத்தில் சந்தித்து அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் வாழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது மகள் இனந்தெரியாத இளைஞனுடன் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக சிறுமியின் தாயாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறுமியின் தாய் திவுலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து சிறுமி தாயின் பாதுகாப்பில் இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recent News