அமெரிக்காவில் பெற்ற தாயாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவனுக்கு உளவியல் பாதிப்பு இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் தற்போது 60 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்கிறான். தமது தாயார் 44 வயதான Quiana Mann என்பவரை VR headset வாங்கித்தராத காரணத்தால் சிறுவன் கொலை செய்துள்ளான்.
இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், VR headset வாங்கித்தர மறுத்ததுடன், காலை 6 மணிக்கு தம்மை தூக்கத்தில் இருந்து எழுப்பியதால் கோபம் வந்தது எனவும், அதனால் துப்பாக்கியால் தாயாரை சுட்டுக்கொன்றதாக தெரிவித்துள்ளான்.
முதலில், துப்பாக்கியுடன் விளையாடும் போது தவறுதலாக வெடித்தது என்றே கருதப்பட்டது. ஆனால் தற்போது வேண்டுமென்றே கொலை செய்துள்ளதாக உறுதியாகியுள்ளது.
சிறுவன் தமது தாயாரை காயப்படுத்துவார் என்று தாம் ஒருபோதும் கருதவில்லை என உறவினர் ஒருவர் தமது அதிர்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், கடந்த ஓராண்டாக சிறுவன் உளவியல் சிகிச்சையில் இருந்து வருவதாகவும்,
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வந்ததாகவும் கூறுகின்றார். மட்டுமின்றி, தாம் கொலை செய்துள்ளது சிறுவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், அதனால் அளிக்கப்பட்டுள்ள தண்டனை, எதிர்காலம் என்பது தொடர்பில் புரிதல் இருக்காது எனவும் அவர் வாதிட்டுள்ளார்.