Tuesday, December 24, 2024
HomeLatest Newsதனது சாதனையை தானே முறியடித்த 04 வயது தமிழ்ச் சிறுமி..!

தனது சாதனையை தானே முறியடித்த 04 வயது தமிழ்ச் சிறுமி..!

தனது முன்னைய சாதனையை தானே மீண்டும் முறியடித்து இரண்டு சாதனைகள் படைத்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட துறைவந்தியமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு இரண்டு உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இவர் தனது இரண்டு கைகளினாலும் A தொடக்கம் Z வரை குறுகிய நேரத்தில் ஆங்கில எழுத்துக்களை எழுதி அவர் முன்னதாக நிகழ்த்திய சாதனையினை தாமே முறியடித்துள்ளார்.

முதலாவது சாதனையாக A தொடக்கம் Z வரையான ஆங்கில எழுத்துக்களை 3.30 நிமிடங்களில் எழுதியும், இரண்டாவது சாதனையாக A தொடக்கம் Z வரையான ஆங்கில எழுத்துக்களை 2.38 நிமிடங்களில் எழுதியும் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சாதனைகளை இந்தியாவின் கல்கத்தாவில் இருக்கும் நேதாஜி உலக சாதனை (Netaji world record) ஆகிய உலக சாதனை புத்தக நிறுவனங்களின் ஊடாக பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சாதனை படைத்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recent News