Saturday, November 23, 2024
HomeLatest NewsWorld Newsநேட்டோவின் தலைமை பதவி: நெதர்லாந்து வசமானது

நேட்டோவின் தலைமை பதவி: நெதர்லாந்து வசமானது

நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு.

உலகில் மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.

இந்த பாதுகாப்பான நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருக்கிறார்.

ஜூலை 9 மற்றும் 11ஆம் திகதி வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் மற்ற நாட்டின் ஜனாதிபதிபதிகள், பிரதமர்கள் அதிகாரப்பூர்வமாக அவரை வரவேற்பார்கள்.

தற்போது பொதுச் செயலாளரான இருக்கும் நோர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அக்டோபர் 1ஆம் திகதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்.

ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022இல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News