Saturday, November 23, 2024
HomeLatest NewsWorld News105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி!!!

105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி!!!

அமரிக்காவில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளமை பலரையும் வியக்கச் செய்துள்ளது.அமரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் என்னும் அந்த மூதாட்டி மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1940 ஆம் ஆண்டு கின்னி தனது இளங்கலைப் பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். தொடர்ந்து தனது முதுகலைப் படிப்பை பயிலத்தொடங்கிய கின்னி ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் கின்னியின் காதலன் ஜார்ஜ் இரண்டாம் உலகப்போரில் பணியாற்ற செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கின்னியின் படிப்பு பாதியில் தடைபட்டது.இந்நிலையில் தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கின்னி பேசுகையில், அடக் கடவுளே , இதற்காக நான் வெகு காலமாக காத்திருந்தேன். முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பில் வெற்றி பெறலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Recent News