Friday, January 24, 2025
HomeLatest NewsWorld Newsஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவில் பெருவெள்ளம் - நிர்கதியாக கிடக்கும் 15 கிராமங்கள் !!!

ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவில் பெருவெள்ளம் – நிர்கதியாக கிடக்கும் 15 கிராமங்கள் !!!

ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியாவில் கனமழை மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாக அப்பகுதியில் உள்ள தொலைக்காட்சி காட்சிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா, டெபெட் நதி போன்ற நதிகள் கனமழை காரணமாக பெருக்கெடுத்ததால் இந்த அனர்த்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன . குறித்த அனர்த்தம் காரணமாக ஆர்மீனியாவின் வடக்கில் ஆபத்தான பகுதிகளில் இருந்து குறைந்தது 230 பேர் வெளியேற்றப்பட்டதாக ஏஜென்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.மேலும் குறித்த கனமழை காரணமாக குறைந்தபட்சம் 15 கிராமங்கள் வெளியுலக உறவில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜியாவின் இன்டர்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று காரணமாகப் பல மரங்கள் வேரோடு சாய்ந்து மின்சாரக் கம்பங்கள் மீது விழுந்தன.
இதன் காரணமாக மில்லியன்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Recent News