உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தப் போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரியான செர்ஜி ஷோய்கு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்ற நிலையில் செர்ஜி ஷோய்கு பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு மந்திரியாக ஆண்ட்ரி பெலோசோவ் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அதிபர் விளாடிமிர் புடின் மேற்கொண்ட மிக முக்கியமான இராணுவ மறுசீரமைப்பு இது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் செர்ஜி செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக புடின் நியமித்துள்ளதுடன் செர்ஜி ஷோய்கு புடினின் நீண்டகால நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது