சூரியக் காந்தப் புயலின் விளைவால் பூமியின் வடக்குப் பகுதியில் Aurora Borealis எனப்படும் கதிரொளி ஒன்று தோன்றியுள்ளது.இதனை அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் கண்டு கழித்து அதனை புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் இணைய தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்
இந்த ஒளிக்கீற்றுக்களானது ஐரோப்பிய நாடுகளில் வானம் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் தென்பட்டது.இது சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் பூமியைத் தாக்கியுள்ள வலுவான புவிக் காந்தப் புயல் என அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சூரிய புயல் தாக்கத்தின் காரணமாக பூமியின் வடக்குப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள உலகளாவிய மின் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புக்கள் பாதிப்புக்குள்ளாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மின் தடை, கையடக்கத்தொலைபேசிக்கான இணைய செயலிழப்பு, வானொலி அலைகள் செயலிழப்பு மற்றும் செயற்கைக்கோள்களின் செயற்பாட்டில் பாதிப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.