ஜப்பானில் கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து கோடீஸ்வரரான நிலையில், பொலிஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்தது.
இந் நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.இந்நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்தது. இதன்போது மருத்துவரின் திருட்டு அம்பலமானது.இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த முறைபாட்டை அடுத்து மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.