Wednesday, December 25, 2024
HomeLatest NewsSrilanka Newsஉலகிலே மிகப்பெரிய இரத்தினக்கல் இதுதான்!

உலகிலே மிகப்பெரிய இரத்தினக்கல் இதுதான்!

உலகிலே மிகப்பெரிய இரத்தினக்கல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 15,000 கோடி மதியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரத்தினக்கல்லானது இலங்கையின் பதுளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதன் நிறை சுமார் 802 கிலோ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்தினக்கல் இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிறம் கொருண்டம் என்ற படிகங்களை கொண்டுள்ளது. கொருண்டம் என்பது மிக முக்கியமான ரத்தின வகைகளில் ஒன்றாகும்.

இந்த இரத்தினக்கல்லானது கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த அளவுக்கு மிகப்பெரிய கொருண்டம் எங்கும் பதிவாகியதில்லை. மேலும் இது உலகின் அரிதான அருங்காட்சியக ரத்தினங்களில் ஒன்று எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News