Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsசர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை ! ஈரானிய அதிபரின் வருகை !

சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை ! ஈரானிய அதிபரின் வருகை !

ஈரான் அதிபரின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும் அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், அவரின் இந்நாட்டிற்கான வருகை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் நாட்டிற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.அத்தோடு, ஈரான் அதிபரின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் அதிபர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News