Wednesday, December 25, 2024
HomeLatest NewsWorld Newsஐஸ் கிரீம் சாப்பிட்டதால் இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு..!!

ஐஸ் கிரீம் சாப்பிட்டதால் இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு..!!

ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் வாங்கியுள்ளனர்.இந்த ஐஸ் கிரீம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில் ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான பூஜா, பிரசன்னா வீட்டிலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்துடன் மயங்கிய நிலையில் இருந்த அவர்களது தாயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இது குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார், ஐஸ் கிரீம் விற்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News