காசாவின் தெற்கு நகரமான ரபாவில் தரைவழித் தாக்குதலை தீவரப்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதையடுத்து ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது இராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்காஇ ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளதுடன் ஹமாஸை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தயாராகி வருவதுடன் ரபா நகரில் உள்ள பலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.