Monday, December 23, 2024
HomeLatest NewsWorld Newsசோதனை சாவடியில் கத்திக்குத்து - பலஸ்தீனர் இஸ்ரேலிய வீரர்களால் படுகொலை !!!

சோதனை சாவடியில் கத்திக்குத்து – பலஸ்தீனர் இஸ்ரேலிய வீரர்களால் படுகொலை !!!

1967 மத்தியகிழக்கு போரில் மேற்குக் கரை, காஸா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. பாலஸ்தீனர்கள் இந்த பிராந்தியங்களை தங்களின் எதிர்கால தேசத்திற்காக கோரிவருகின்றனர்.இந்நிலையில் ஜெருசலேம் அருகில் உள்ள சோதனை சாவடியில் பாலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேலிய வீரர்கள் இருவரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியதாகவும் அவரை பாதுகாவலர்கள் சுட்டு கொன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நடந்த இந்த தாக்குதலில் காயமுற்றவர்கள் நிலை, நடுத்தரமாக இருப்பதாக தெரிவித்த காவல்துறை அவர்கள் குறித்த மற்ற விவரங்களை வெளியிடவில்லை.accaஅக்.7 ஹமாஸ்- இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது முதல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் அடிக்கடி பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதுவரை மேற்குக் கரை பகுதியில் 427 பாலஸ்தீனர்கள் பலியாகியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.போருக்கு இடையே இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியிருக்கும் நிலையில், புனித தலமான ஜெருசலேம் பகுதியில் மோதல் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது .

Recent News