Monday, November 25, 2024
HomeLatest NewsWorld Newsநிலவுக்கு அமெரிக்கா அனுப்பிய தனியார் விண்கலம்: பூமியுடன் தொடர்பை இழந்தது..!

நிலவுக்கு அமெரிக்கா அனுப்பிய தனியார் விண்கலம்: பூமியுடன் தொடர்பை இழந்தது..!

நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன.அதன்படி முதன்முறையாக 1972-ம் ஆண்டு அப்பல்லோ என்ற விண்கலத்தை அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. இதனையடுத்து ரஷியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பின.

இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவின் ஹூஸ்டனை தளமாக கொண்டுசெயல்படும் இன்டுயடிவ் மெஷின்ஸ் என்ற தனியார் நிறுவனமும் இணைந்துள்ளது.அதன்படி அந்த நிறுவனம் ஒடிசியஸ் என்ற முதல் வணிக விண்கலத்தை கடந்தவாரம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கியது. இதன்மூலம்சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க விண்கலம் மீண்டும் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது.

இந்த விண்கலம் கடந்த ஒரு வாரத்தில் நிலவின் பல்வேறு புகைப்படங்களைஎடுத்து அனுப்பிய நிலையில் தற்போது அதன் தொடர்பை இழந்தது. அதனை மீண்டும் தொடர்பு கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News