உக்ரைனுக்கும் மால்டோவாவுக்கும் இடையில் ஓர் பிரதேசம் புதன்கிழமை ரஷ்யாவிடம் தங்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன,டைனெஸ்டர் ஆற்றின் கிழக்குக் கரையில் சுயமானது என அறிவிக்கப்பட்ட ஆனால் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத மைக்ரோஸ்டேட் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பாதுகாப்புக்காக ரஷ்ய நாட்டிடம் அழைப்பு, விடுத்துள்ளது
பெரும்பாலும் ரஷ்ய மொழி பேசும் இந்த பகுதி மால்டோவாவிலிருந்து பிரிந்துஇ சோவியத் யூனியன் இந்த வீழ்ச்சிக்கு பின்னர் 1992 இல் ஒரு சிறிய போருக்குப் பிறகு,அதன் சொந்த தேசிய அரசாங்கத்தை அமைத்தது.ஆரம்பத்தில் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் பிரதிநிதிகள் காங்கிரஸின் சிறப்பு அமர்வில் கலந்து கொண்டுவந்தனர் ,அதன் கடைசி அமர்வான ,2006 இற்கு பிறகு இரு தரப்பினரும் அரிதாகவே சந்தித்து வந்தனர் . தற்போது ரஷ்ய சட்டமன்றத்திடம் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளது .இந்த வேண்டுதல் குறித்து ரஷ்யா இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை