இஸ்ரேல் ஹமாஸ் போரினால் நகரில் பெத்தலகேமில் இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா மீதான தாக்குதல் தொடர்ந்து வருகின்ற நிலையில் காசா பகுதியில் நடந்து வரும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இந்த கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயேசு கிறிஸ்து பிறந்த நகரமான இஸ்ரேலுக்கு மேற்கு கரையில் அமைந்துள்ள பெத்தலகேம், பொதுவாக டிசம்பர் மாத பிற்பகுதியில் யாத்ரீகர்கள் மற்றும் பிற கொண்டாட்டக்காரர்களால் நிரம்பி வழியும்.
கிறிஸ்மஸ் நேரத்தில் பெத்லஹேமுக்கு வழக்கமாக தினமும் 6,000 பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் இம்முறை போரினால் பொது கொண்டாட்டங்களை ரத்து செய்ய கடந்த மாதம் ஒன்றுகூடிய பல பலஸ்தீனிய கிறிஸ்தவ தலைவர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள், குறைக்கப்பட்ட பண்டிகைகளைத் தொடர்ந்து, 2022 இல் பெத்லஹேகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இவ் வருட கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெத்லகேமில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து, “ஹமாஸின் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம், இது கிட்டத்தட்ட 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் பிற நாடுகளின் குடிமக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, மேலும் பிணைக் கைதிகளாக உள்ள அனைத்து பொதுமக்களையும் உடனடியாக விடுவிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என்று பெத்லஹேம் மதகுருமார்கள் குழு அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.