Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsதெற்கு லெபனானை குறிவைத்து இஸ்ரேலிய ஷெல் தாக்குதல்..!

தெற்கு லெபனானை குறிவைத்து இஸ்ரேலிய ஷெல் தாக்குதல்..!


தெற்கு லெபனான் நகரமான ஐதா அல்-ஷாப் அருகே இஸ்ரேலிய ஷெல் தாக்கியதாக
லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் காசா பகுதியில் சண்டையை நிறுத்தியிருந்தாலும், குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இடம்பெறவில்லை.

எவ்வாறாயினும், போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை தொடங்கியதில் இருந்து, லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல வாரங்களாக எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


இந்த நிலையில் இன்று தெற்கு லெபனானி குறிவைத்து இஸ்ரேல்
தாக்குதலை நடாத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent News