அக்டோபர் 7 முதல் 10,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் “எல்லா மனிதாபிமான விழுமியங்களையும் நசுக்குகிறது” என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேல் பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், அனைத்து மனிதாபிமான விழுமியங்களையும் நசுக்குவதைத் தொடர்கிறது,” என்று எர்டோகன் கூறினார். கொல்லப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
230 டன் மனிதாபிமான உதவிகளுடன் 10 விமானங்களை காசாவுக்கான எல் அரிஷ்
( El Arish ) விமான நிலையத்திற்கு எகிப்தின் உதவியுடன் துருக்கி அனுப்பியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.