இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை
1 லட்சத்தை தண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொதுமக்களை ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையிலே இவ்வாறு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது .
கடந்த 20 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில்
இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
எதிரிகளிடமிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள
சிலர் ஆயுதங்கள் கொண்டு போராடியும் உள்ளனர்.
தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மக்களிடம்
ஆயுதங்கள் வைத்து கொள்வதை ஊக்குவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலானது துப்பாக்கி விதிகள் அதிகம் கொண்ட நாடாகும்.
துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதியும் கிடையாது .