Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஏவப்பட்ட 14 ஏவுகணைகள் - உக்கிரத்தில் உக்ரைன்..!

ஏவப்பட்ட 14 ஏவுகணைகள் – உக்கிரத்தில் உக்ரைன்..!

உக்ரைன் ரஷ்யப்போரின் உக்கிரம் குறைவடைந்து செல்கின்ற நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிய பகுதி மீது 14 முறை உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர் நடவடிக்கையின் தொடக்க கால கட்டங்களில் போர் தீவிரமாக நடைபெற தொடங்கிய போது ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தை சுயமாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என ரஷ்யா அறிவித்தது.

இதற்கு உக்ரைன் மற்றும் பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையான நேற்று மட்டும் சுயமாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீது உக்ரைன் 14 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை DPR பணிக்களுக்கான கூட்டு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் 155 மிமீ மற்றும் 152 மிமீ காலிபர் பீரங்கி துப்பாக்கிகள் பயன்படுத்தியுள்ளனர்.அத்துடன் பலமுறை ஏவுதல் ராக்கெட் அமைப்பும், 35 யூனிட் வரையிலான வெடி மருந்துகளையும் உக்ரைன் பயன்படுத்தியுள்ளது.

Recent News