Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைனால் கொல்லப்பட்ட தளபதி உயிருடன் - வெளியான காணொளியால் சர்ச்சை..!

உக்ரைனால் கொல்லப்பட்ட தளபதி உயிருடன் – வெளியான காணொளியால் சர்ச்சை..!

கருங்கடல் கடற்படையின் ரஷ்ய தளபதியைக் கொன்றதாக உக்ரைன் கூறினாலும், அவர் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான காணொளி மாநாட்டில்,விக்டர் சோகோலோவ் பங்கேற்கும் புகைப்படத்தை ரஷ்யா தற்போது வெளியிட்டுள்ளது.

மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எட்டு நிமிட காணொளியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மாநாடு செவ்வாய்க்கிழமை காலை நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மொஸ்கோவில் உள்ள ஒரு மாநாட்டு அறையில் மூத்த அதிகாரிகளுடன் பேசுவதை குறித்த காணொளி காட்டுகிறது.

கருங்கடல் கடற்படை உட்பட ரஷ்யாவின் ஐந்து கடற்படைகளின் தளபதிகளுடன் காணொளி இணைப்பில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் காணப்படுகிறார் என்பதோடு அவர்களில் யாரும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால் இந்த சந்திப்பு உண்மையில் செவ்வாய்க்கிழமை நடந்ததா அல்லது காணொளி இணைப்பில் உள்ள விக்டர் சோகோலோவ் இன் படம் உண்மையான நேரத்தில் உள்ளதா என்பதை இதுவரை சரிபார்க்க முடியவில்லை என ஊடகமொன்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News