Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsவாக்னா் தலைவா் மரணம் - ஒப்புக்கொண்ட ரஷ்யா - அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!

வாக்னா் தலைவா் மரணம் – ஒப்புக்கொண்ட ரஷ்யா – அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!

ரஷ்யா அதிபா் புதினின் துணை ராணுவப் படை என்று வா்ணிக்கப்பட்ட வாக்னர் குழு, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷிய ராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.

எனினும், இந்தப் போரின்போது ராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து. இந்த நிலையில், ராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23-ஆம் தேதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, அதிபா் விளாதிமீா் புதினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். அதைத்தொடர்ந்து புதின், ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி மாஸ்கோவிலிருந்து ஜெவ்ஜெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விமான விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று அந்த நாட்டு அரசு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.இந்த விபத்துக்கு ரஷிய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அரசின் செய்தித் தொடா்பாளா் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் , ஜெவ்ஜெனி ப்ரிகோஷின் உயிருடன் இருப்பதாகவும், புடினை பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டுவருவதாகவும், ரஷ்ய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News