அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.
தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக இவர் மீது ஜார்ஜியாக உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டது.
அந்த வகையில் அமெரிக்க நேரப்படி 24-ந்தேதி இரவு, 7 மணியளவில் ஜார்ஜியா வழக்கு தொடர்பாக அட்லாண்டா சிறையில் சரணடைந்தார்.
பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், 20 நிமிடங்கள் சிறையில் இருந்த அவர்2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின் அவர் உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் டிரம்ப், வழக்கு தொடர்பான விசயங்களால் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சரணடைந்து ஜாமீன் பெற்று வருகிறார் என்ற கருத்துக்களும் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.