Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஆப்கானிஸ்தானில் 2ம் ஆண்டு நிறைவடைந்த ஆட்சி -களைகட்டிய கொண்டாட்டங்கள்..!

ஆப்கானிஸ்தானில் 2ம் ஆண்டு நிறைவடைந்த ஆட்சி -களைகட்டிய கொண்டாட்டங்கள்..!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை.

இந்த நிலையில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தலிபான்கள் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதற்கு வழி வகுக்கும் இந்த வெற்றி பாராட்டுக்குறியது. காபூலைக் கைப்பற்றியதன் மூலம், பெருமைமிக்க தேசமான ஆப்கானிஸ்தானை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுள்ளது. எந்தவொரு ஆக்கிரமிப்பாளரும் எங்கள் நாட்டின் சுதந்திரத்தை அச்சுறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளது.

Recent News